வெறிநாய்க்கடி நோய்

வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் 


வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் (Rabies) என்பது மனிதர்விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றான ரேபீஸ் தீநுண்மத்தால் (rabies virus), இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளில் ஏற்படும் மூளையழற்சி நோய் ஆகும் பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும்.

 

வெறிநாயின் அடையாளம்:

  • ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும்.
  • அது ஊளையிடுவது போலிருக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
  • பார்ப்போர் அனைவரையும் துரத்தும். தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும்.
  • நாக்கு அதிகமாக வெளியே தள்ளி இருக்கும்.
  • எந்நேரமும் எச்சில்  ஒழுகிக்கொண்டிருக்கும்.
  • ரேபீஸ் வந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெறிநாய்கள் இருப்பதுண்டு.
  • வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக, மிகவும் அமைதியாக இருக்கும்.

Woofy Dog Mouth Cover Muzzle Guard with Adjustable Strap Buckle Muzzle Ideal for for Grooming, Training and Chewing Aggressive Dog and Puppy - Black (No-1, X-Small)

RS.241

Buy link 👇

                                   https://amzn.to/4oSHZU7


பரவும் விதம்:  

                    காடுகளில் வாழும் சிலவகை வௌவால்நரிஓநாய், மற்றும் வீட்டு விலங்கான நாய்போன்ற ஒரு சில விலங்குகளின் உடலில் வழக்கமாய் வாழும் இந்த வைரசு, அவ்விலங்குகள் கடிப்பதால் நேரடியாகவோ, அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ இந் நோய் ஏற்படுகிறது. கொல்லைப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கான நாயிலிருந்தே இந்நோய் பொதுவாக மனிதர்களுக்குப் பரவுகின்றது.
இந்த வைரசு அதிக அளவாக ஐந்து ஆண்டுகள் வரை 'உறக்கத்தில்' இருந்துவிட்டுக் கூடத் தாக்கலாம் .

            ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள்  உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின்  வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும். இதுதவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும்,  திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால்,  பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம். முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

PAYTON PERRY No Pull Dog Body Belt | Adjustable & Soft Padded Dog Harness | for 14-23Kg Dogs - Pomeranian, Beagle, Bulldog (M, Black)

RS.450
Buy link 👇

                                          Click me

அறிகுறிகள் :

  • பொதுவாக, வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு  கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். 
  • இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது.
  • காய்ச்சல், வாந்தி  வரும். உணவு சாப்பிட முடியாது.
  • தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள் .இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர்.
  • இவர்கள் உடலில் அதிக  வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும்.
  • எதையாவது பார்த்து ஓடப்  பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்து வதும் கடிக்க வருவதுமாக இருப்பார்கள்.
  • நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று  உயிரிழப்பார்கள்.

தடுப்பூசி :

  • ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் வர விடாமல் தடுத்துவிடலாம். இந்த  ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை.
  • நாய் கடித்த அன்றே இச்சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
  • நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என 5 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
  • காயம்  கடுமையாக இருந்தால், 6வது ஊசியை 90வது நாளில் போட்டுக் கொள்ளலாம்.
  • இத்தடுப்பூசி  எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

நாய்க்கடிக்கு நவீன சிகிச்சை:

        ரேபீஸ் நோயாளியை சில மருந்துகள் மூலம் செயற்கையாக கோமா நிலைக்குக் கொண்டு சென்று, அமான்டடின் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை  ஒரு வாரத்துக்குக் கொடுத்து வந்தால், ரேபீஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடல் பெற்றுவிடுகிறது. இதன் பலனால், நோய் குணமாகிவிடுகிறது.  இது எல்லோருக்கும் பலன் தரும் எனக் கூற முடியாது. உடலுக்குள் புகுந்த ரேபீஸ் கிருமிகள் வீரியம் குறைந்ததாக இருந்தால் அல்லது இவை  மூளையைத் தாக்குவதற்கு முன்னால் இந்தச் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் ரேபீஸ் நோயாளி உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இதுவரை உலகில் 7  ரேபீஸ் நோயாளிகள் இப்படி உயிர் பிழைத்து வரலாறு படைத்துள்ளனர். உயிர் காக்கும் இந்தச் சிகிச்சைக்கு மில்வாக்கீ புரோட்டக்கால் (Milwaukee  protocol) என்று பெயர். தமிழகத்தில் வேலூரிலுள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

Pets Empire Dog Bowl| Anti-Skid Stainless Steel Bowls for Puppy and Cat | Food & Water Bowl | Cat Bowl | Gifts for Dogs Birthday | Black & Grey Color Combo, Medium Size - 700ml

RS.245
Buy link 👇
    Click Me

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு முதலமைச்சரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் போர் ஏற்பட்டால் என்ன ஆகும் ?