வெறிநாய்க்கடி நோய்
வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் ( Rabies ) என்பது மனிதர் , விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றான ரேபீஸ் தீநுண்மத்தால் ( rabies virus ), இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளில் ஏற்படும் மூளையழற்சி நோய் ஆகும் பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும். வெறிநாயின் அடையாளம்: ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும். அது ஊளையிடுவது போலிருக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும். தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு அதிகமாக வெளியே தள்ளி இருக்கும். எந்நேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். ரேபீஸ் வந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெறிநாய்கள் இருப்பதுண்டு. வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக, மிகவும் அமைதியாக இருக்கும். Woofy Dog Mou...