அக்னி-5
அக்னி-5
அக்னி-5 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும். இந்த ஏவுகணை 19 ஏப்ரல் 2012 மற்றும் 15 செப்டம்பர் 2013 அன்றும் ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
மழைக்காலம் நண்பா குடை வாங்குவீர்
அமேசான்னில் தரமான குடை
ரூபாய் 349 மட்டுமே /-
வாங்குவதற்கு link ஐ click செய்யவும்
https://amzn.to/47EwARq
அக்னி -5 இன் வல்லமை :
அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில் பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.
அக்னி -5 இன் சிறப்பம்சங்கள் :
- அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டு செல்லக்கூடியது.
- தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கி.மீ. (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.
- அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.
- அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க ₹25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது.
- இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.
- அக்னி-5 ஏவுகணை செயற்கைக்கோள்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது.
- அக்னி 5 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்தியா நவீன ஏவுகணையை உருவாக்கிவிடாமல் தடுக்க வல்லரசு நாடுகள் கடந்தகாலத்தில் போட்ட முட்டுக்கட்டைகளை மீறி இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக